Categories
கிரிக்கெட் விளையாட்டு

BAN VS SL :முதல் ஒருநாள் போட்டியில்…இலங்கை அணியை வீழ்த்தி …வங்காளதேச அணி அபார வெற்றி…!!!

இலங்கைக்கு எதிரான  முதல் ஒருநாள் போட்டியில், வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது.

வங்காளதேசம் -இலங்கை அணிகளுக்கிடையேயான, முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததால், இலங்கை பவுலிங்கில் களமிறங்கியது. எனவே  பேட்டிங்கில்  களமிறங்கிய வங்காளதேச அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களை குவித்தது. குறிப்பாக வங்காளதேச அணியில் முஷ்பிகுர் ரஹிம் 84 ரன்களும், மஹமதுல்லா 54 ரன்கள் மற்றும் தமிம் இக்பால்  52 ரன்களும் எடுத்திருந்தனர்.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 258 ரன்களை, வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால் வங்காளதேச அணியின் பவுலிங் சிறப்பாக இருந்ததால், இலங்கை அணியால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதனால் இலங்கை அணி 224 ரன்களில் ஆல் அவுட் ஆனது.  இதனால் 33 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, வங்காளதேசஅணி அபார வெற்றி பெற்றது. எனவே இந்த வெற்றியின் மூலம், 3 ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் வங்காளதேச அணி  முன்னிலையில் உள்ளது.

Categories

Tech |