கனடா அரசு 7 தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் தடைவிதிப்பதாக அறிவித்திருக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் ஓமைக்ரான் என்ற புதிய வகை மாறுபாடு கண்டறியப்பட்டது. அந்த வைரஸ், அதிக வீரியம் மிக்கது என்றும் விரைவில் பரவும் திறன் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளும் தென் ஆப்பிரிக்க நாடுகள் மீது பயணத்தடை விதித்து வருகிறது.
இந்நிலையில், கனடா அரசும், தங்கள் நாட்டிற்குள் அந்த வைரஸை பரவ விடாமல் தடுப்பதற்காக ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோதோ, மொசாம்பிக் மற்றும் நமீபியா ஆகிய 7 தென்னாப்பிரிக்க நாடுகளிலிருந்து, வரும் பயணிகளுக்கு தடை அறிவிப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் Jean-Yves Duclos கூறியிருக்கிறார்.
இது மட்டுமல்லாமல், தங்கள் நாட்டிற்கு திரும்பும் கனடா மக்களும், மீண்டும் நாட்டிற்குள் நுழைய சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.