தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த மற்றும் சிறப்பு வாய்ந்த பல கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நீதிமன்ற உத்தரவின்படி செல்போன் பயன்படுத்துவதற்கான தடை தற்போது அமலில் இருக்கிறது.
இதேபோன்று தமிழகத்தில் உள்ள உள்ள 48 பழமை வாய்ந்த கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்கு தடை கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார். மேலும் முதல் கட்ட நடவடிக்கையாக பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவிலில் செல்போன் டோக்கன் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டு, மீண்டும் பக்தர்களிடம் செல்போனை ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.