ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக கருத்துக்களை பகிர் தமிழக அரசு மின்னஞ்சல் வெளியிட்டுள்ளது. [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைய தலைமுறை மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஆகியோரிடம் இருந்து கருத்துக்களை கேட்க அரசு முடிவு செய்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக அரசின் உடைய உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை சொல்லி இருக்கிறார்கள். அது மட்டுமல்லால் மின்னஞ்சல் மூலமாக வரக்கூடிய கருத்துக்கள் 12-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று சொல்கிறார்கள். இதில் முக்கியமானதாக ஆன்லைனில் பற்றிய கருத்துக்களை நேரடியாக பகிரக நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை நேரில் சந்தித்து தங்களது கருத்துக்களை 9. 8. 2022ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது கோரிக்கைகளை சொல்லலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
முதல்முறையாக ஆன்லைன் கேம்ஸ் யார் யாரெல்லாம் நடத்துகிறார்களோ அந்த நிறுவனத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. கருத்துக்கு கேட்பு கூட்டம் 11.8.2022 அன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தனிநேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. முதல் முறையாக எந்தெந்த நிறுவனங்கள் எல்லாம் ஆன்லைன் ரம்மி போன்ற விஷயங்களை நடத்துகிறார்களோ , அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது முக்கியமாக பார்க்க வேண்டியதாக இருக்கிறது.