வியட்நாமில் உள்ள ஹனோய் நகரம், வரும் 2025 ஆம் வருடத்திற்கு பின் மோட்டார் பைக்குகள் பயன்படுத்துவதை தடை செய்ய தீர்மானித்திருக்கிறது.
வியட்நாமில் இருக்கும் ஹனோய் என்ற நகரத்தில் வரும் 2025-ஆம் வருடத்திற்கு பிறகு சில மாவட்டங்களில் மோட்டார் பைக்குகள் பயன்படுத்த தடை அறிவிக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பில், அந்நகரத்தின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹோவாங் சா, ட்ரூவாங் சா மற்றும் தேசிய நெடுஞ்சாலை 5 போன்ற 3 ரிங்க் சாலை பகுதியில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் மோட்டார் பைக்குகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, புகை வெளியேறுவது, போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்காக இத்திட்டம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. அதனையடுத்து, வரும் 2030ஆம் வருடத்திற்கு பின் இந்த தடையை அனைத்து மாவட்டங்களுக்கும் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது, வியட்நாமின் தலைநகரில் சுமார் 56 லட்சம் மோட்டார் பைக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில், தனி நபர்கள் மோட்டார் வாகனங்களை உபயோகிப்பது அதிகரித்திருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.