Categories
கால் பந்து விளையாட்டு

பாலன் டி ஓர் விருது :7வது முறையாக வென்று ….லியோனல் மெஸ்ஸி சாதனை …..!!!

கால்பந்து தொடரின் உயரிய விருதான பாலன் டி ஓர் விருதை லியோனல் மெஸ்ஸி 7-வது முறையாக வென்றுள்ளார் .

கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பாலன் டி ஓர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா  தொற்று பரவல்  காரணமாக பாலன் டி ஓர் விருது வழங்கப்படவில்லை. இதனிடையே இந்த ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருது நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் நேற்று பாரிசில் நடைபெற்ற விழாவில் உலகின் முன்னணி கால்பந்து வீரரும் ,அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி 7-வது முறையாக இந்த விருதை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த விருதை அவர் வென்றார் . குறிப்பாக கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் முறையாக  இந்த விருதை வென்ற மெஸ்ஸி  தொடர்ச்சியாக 2010, 2011 மற்றும் 2012 ஆகிய வருடங்களிலும் இந்த விருதை பெற்றுள்ளார் .

இதன் பிறகு 2015-ஆம் ஆண்டு 5-வது முறையாக அவர் இந்த விருதை பெற்றார் .சமீபத்தில் நடந்த 15-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 28 ஆண்டுகளில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த விருது வென்ற பிறகு லியோனல் மெஸ்ஸி கூறும்போது,” நான் எப்போது ஓய்வு பெற போகிறேன் என்று மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கின்றனர்.ஆனால் இப்போது நான் இங்கே இந்த விருதை பெற்றுக் கொண்டு நிற்கிறேன்.மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.அதோடு  நான் இன்னும் எத்தனை வருடங்கள் விளையாடுவேன் என எனக்கு தெரியவில்லை. அர்ஜென்டினா அணிக்காக  கோபா அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை பெற்று தந்ததன் மூலம்  என்னுடைய கனவு நினைவாகிறது .அதனை எனது சக வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் “இவ்வாறு அவர் கூறினார். அதேபோல் மகளிருக்கான பாலன் டி ஓர் விருதை ஸ்பெயின் வீராங்கனை புட்டெல்லாஸ் 3-வது முறையாக வென்றார் .

Categories

Tech |