விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலந்து கொண்டார். டிக் டாக் மூலம் பிரபலமான ஜி.பி முத்து அதன் தடைக்கு பிறகு யூட்யூபில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ஜிபி முத்துவுக்கு அமோகமான ஆதரவு கிடைத்த நிலையில், இரண்டே வாரத்தில் தன்னுடைய குடும்பத்தின் ஞாபகமாக இருப்பதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று நடைபெற்ற ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜிபி முத்து கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது நடிகை சன்னி லியோனுக்கு ஜிபி முத்து பால்கோவா ஊட்ட அவரும் பதிலுக்கு பால்கோவாவை ஊட்டி விட்டார்.
இதேபோன்று நடிகை தர்ஷா குப்தாவுக்கு ஜிபி முத்து லட்டு ஊட்டினார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியான நிலையில், நெட்டிசன்கள் பலரும் ஜி பி முத்துவை பங்கமாய் கலாய்த்து வருகின்றனர். அதாவது ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தான் குடும்பத்தின் ஞாபகம் வந்தது எனக்கு ஒரு பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினீர்களா என்று கேட்டு வருகிறார்கள். மேலும் இசை வெளியீட்டு விழாவின்போது நடிகர் சதீஷும் ஜிபி முத்துவை பார்த்து இதற்காகத்தான் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.