Categories
அரசியல் மாநில செய்திகள்

“3 பேருக்கு பலே செக்” …. முதல்வர் ஸ்டாலின் போட்ட கணக்கு…. வேற லெவலில் உயரப் போகும் திமுக இமேஜ்….!!!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை பொதுமக்களுக்கு வழங்காததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், 17 காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதோடு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது ஒவ்வொரு நிமிடமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தகவல் தெரிவித்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையில், அம்மா ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப் பட்டுள்ளதோடு, சசிகலா, மருத்துவர் கே.எஸ் ரவிக்குமார், முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ், ஒய்சிவி ரெட்டி, பாபு ஆபிரகாம், அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி. ரெட்டி ஆகியோரும் விசாரிக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2 அறிக்கைகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் சட்ட ஆலோசகருடன தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக ஜெயலலிதா மரணம் குறித்த உண்மை நிலவரத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியில் கொண்டு வந்தால் மக்கள் மத்தியில் திமுகவின் இமேஜ் உயரும். அதோடு கொடுத்த வாக்குறுதியையும் திமுகவால் நிறைவேற்றி விட முடியும். மேலும் ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கைகளில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் சசிகலா  ஆகியோருக்கு முதல்வர் செக் வைத்துள்ளதாக தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Categories

Tech |