Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ரூ18,00,000 கடன் பாக்கி….. 10 அடி புத்தர் சிலையை தூக்கி சென்ற உரிமையாளர்….. மாமல்லபுர சுற்றுலாவாசிகள் அதிருப்தி…!!

கடன் பாக்கியை பேரூராட்சி முறையாக செலுத்தாததால் மாமல்லபுர கடற்கரையின் முகப்பு  வாசலில் வைக்கப்பட்டிருந்த 10 அடி உயரம் கொண்ட புத்தர் சிலையை அதன் உரிமையாளர் எடுத்து சென்ற சம்பவம் அதிருத்தியை  ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் மூன்று மாதங்களுக்கு முன் பாரத பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர்  சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில் இரு நாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள புராண காலத்தை ஞாபகப்படுத்தும் வகையில் உள்ள சின்னங்களையும் சிற்பங்களையும் கண்டு மகிழ்ந்தனர்.

இந்நிலையில் சீன அதிபரை உற்சாகப்படுத்தும் விதமாக சீன மக்கள் கடவுளாக வழிபடும் புத்தர் சிலையையும் அதற்கு சிறப்பு செய்யும் வகையில் இரண்டு யானை சிலைகளையும் வைக்க அப்பகுதி பேரூராட்சி முடிவு செய்தது. அதன்படி ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான பத்தடி உயரம் கொண்ட புத்தர் சிலையை மாமல்லபுர சிற்பம் தயாரிக்கும் கலைக்கூடத்தில் இருந்தும், 10 லட்சம் மதிப்பிலான 7 அடி உயரம் கொண்ட இரண்டு யானை சிலைகளை திருவள்ளுவர் சிற்பம் தயாரிக்கும் கலைக்கூடத்தில் இருந்தும்  வாங்கிவந்து வைத்தனர்.

இதற்கான செலவு தொகையை பேரூராட்சி வழங்கும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து தலைவர்கள் சென்று வந்து சென்று மூன்று மாதங்கள் கழிந்த பின்னும் இதுவரை எந்த தொகையும் சிலைகளுக்கு வழங்கப்படவில்லை இதுகுறித்து சிலை உரிமையாளர்களும் பலமுறை பேரூராட்சி தொகை குறித்து கேட்ட பொழுது சரியான பதிலும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

Image result for மாமல்லபுர புத்தர் சிலை

இதனால் விரக்தி அடைந்த அவர்கள் எந்தவித முன் அனுமதியும் இன்றி புத்தர் சிலைகளையும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த புலி யானை உள்ளிட்ட தங்களது சிலைகளை எடுத்துக்கொண்டு தங்கள் கலை கூடத்திற்கு சென்றுவிட்டனர். கடற்கரை மாமல்லபுரம் கடற்கரை கோவில் முகப்பு வாசலில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை திடீரென அகற்றப்பட்டது சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Categories

Tech |