Categories
சினிமா தமிழ் சினிமா

பாலாஜி பற்றி கவலைப்படும் ரியோ ,சோம்… வெளியான செகண்ட் புரோமோ…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதுவரை நான்கு சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வில் ஐந்தாவது சுற்று நடைபெறுகிறது . இந்த சுற்றில் போட்டியாளர்கள் கொடுக்கப்பட்ட வளையத்துக்குள் பந்தை சரியாக பேலன்ஸ் செய்து கடைசிவரை கீழே விழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் . இதில் ரம்யா, ஆரி, சோம், கேபி ஆகியோர் தோற்று விடுகின்றனர். இறுதிவரை பாலா மற்றும் ரியோ சிறப்பாக விளையாடுகிறார்கள். இவர்களில் ரியோ அசத்தலாக விளையாடி வெற்றி பெறுகிறார் . இதனால் இறுதிச்சுற்றில் தகுதி பெற அதிக வாய்ப்பு ரியோவுக்கு இருப்பதாக கருதப்படுகிறது .

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வில் பாலாவின் கேம் பற்றி கார்டன் ஏரியாவில் அமர்ந்து சோம் மற்றும் ரியோ இருவரும் பேசுகின்றனர் ‌. அதில் ‘வீட்டுக்குள் வந்து சென்ற உறவினர்கள் பழைய பாலாவை காணோம்னு சொல்லி சொல்லியே அவன் ஒரு மாதிரி ஆயிட்டான் பாவம் . பாலா கேம் ன்னு வந்துட்டா சிறப்பாக விளையாடுவான். அவன் அடிக்கடி இப்படி சண்டை போடுவதற்கு நாம தான் காரணம், அதிலும் முக்கியமாக ஒருவர் காரணம் என மறைமுகமாக ஆரியை சுட்டிக்காட்டுகின்றனர்.

Categories

Tech |