Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பேக்கரியில் திருட முயற்சி…. வசமாக சிக்கிய இருவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

பேக்கரியில் பணத்தை திருட முயன்ற குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பேக்கரி ஒன்று அமைந்துள்ளது. இந்த பேக்கரி டீ குடிப்பதற்காக 2 பேர் சென்றுள்ளனர். இந்நிலையில் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்தவர் எழுந்து சிறிது தூரம் சென்றுள்ளார். அப்போது அந்த இரண்டு பேரும் கல்லாவில் இருந்த பணத்தை திருடிவிட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர்.

இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் இரண்டு பேரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் ரத்தினபுரம் கிராமத்தில் வசிக்கும் அழகுதுரை மற்றும் சாதிக்பாட்சா என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேக்கரியில் திருட முயன்ற குற்றத்திற்காக 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |