Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விவாகரத்து முடிவை கைவிட்ட பேட்ட பட வில்லன்…. தந்தையாக பார்த்துக்கொள்வார் என்று மனைவி உருக்கம்…!!

ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் விவாகரத்து முடிவை கைவிட்டு மனைவியுடன் ஒன்று சேர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இப்படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் வில்லனாக நடித்திருந்தார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிந்து சென்றனர். இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நவாசுததீனும், ஆலியாவும் தங்களது விவாகரத்து முடிவை கைவிட்டு தற்போது மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து ஆலியா கூறியதாவது, “சில வாரங்களுக்கு முன்பு நான் கொரோனாவால் அவதியுற்றேன். அப்போது நவாசுதீன் தான் குழந்தைகளையும் என்னையும் நன்றாக பார்த்துக் கொண்டார். அவர் எனக்கு தந்தையாகவும், கணவராகவும் அரவணைத்து அன்பாக நடந்து கொள்கிறார். இப்போது அவரது இன்னொரு பக்கத்தை பார்க்கிறேன். ஆகையால் நடந்தவற்றை மறந்து குழந்தைகளுக்காக ஒன்று சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்

Categories

Tech |