தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுருதிஹாசன். இவருக்கு தமிழில் சரிவர பட வாய்ப்புகள் தற்போது இல்லாததால், தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து வால்டர் வீரையா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து வீரசிம்மா ரெட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
அதன் பிறகு நடிகை சுருதிஹாசன் கேஜிஎப் இயக்குனரின் சலார் படத்திலும் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். ஆனால் தற்போது முகம் எல்லாம் வீங்கியபடி இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அதோடு ஜுரம் மற்றும் சைனஸ் காரணமாக முகம் வீங்கிய நாள் என்றும், மாதவிடாய் மற்றும் இன்னும் பிற காரணங்கள் இருக்கிறது எனவும் பதிவிட்டுள்ளார். இவற்றையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். விசித்திரமாக இரு என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் டாப் ஹீரோயினான ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக தன்னுடைய முகம் வீங்கி இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram