Categories
உலக செய்திகள்

நல்ல விஷயம்… கொரோனா அச்சத்தால் அந்த பழக்கத்தை நிறுத்திய மக்கள்!

கொரோனா தொற்று அச்சத்தினால் 3 லட்சம் பேர் கெட்ட பழக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது

கொரோனா தொற்றுப் பரவல் அச்சத்தினால் பிரித்தானியாவில் நல்ல விஷயம் ஒன்று நடந்துள்ளது. அது பிரித்தானியர்கள் 3 லட்சம் பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு உள்ளனர் என்பதுதான். புகை பிடிப்பவர்களை தான் கொரோனா எளிதில் தாக்கும் வாய்ப்பு உள்ளது என தகவல் பரவியதை தொடர்ந்து, அச்சமடைந்த மக்கள் 3 லட்சம் பேர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுள்ளனர் என ஆய்வு தெரிவிக்கின்றது. YouGov மற்றும்  Action on Smoking and Health இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு முயற்சி செய்து வருவதாகவும், 2.4 மில்லியன் பேர் புகைப்பிடிப்பதை குறைத்து விட்டதாகவும், அவர்கள் நடத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. 1004 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 2 சதவீதம் பேர் கொரோனா அச்சத்தினால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுள்ளனர். 8% பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். 27 சதவீதம் பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட இருக்கிறார்கள். 36% பேர் புகைப்பிடிக்கும் அளவை குறைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |