பிக்பாஸ் பிரபலம் அபிராமி, தன்னை பற்றி மோசமாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். சமூக வலைத்தளங்கள் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அபிராமி முன்பு இருந்ததை விட தற்போது குண்டாக இருப்பதாகவும், அவரது கவர்ச்சியை வைத்து ஆபாசமாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய அபிராமி, “என்னை பற்றி இப்படி பேசுவதற்கு முன் உங்கள் அம்மாவை நினைத்துப் பாருங்கள். பெண்களை மரியாதையுடன் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள். இது ஜனநாயக நாடு தான். ஆனால் வெக்கம், மரியாதை இல்லாத நாடு கிடையாது. கொஞ்சம் உணர்வோடு பேசுங்கள். இப்படிப்பட்ட நான்சென்ஸ் எல்லாம் வேண்டாம்” என்று தன்னைப் பற்றி மோசமாக கமெண்ட் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.