Categories
மாநில செய்திகள்

BSNL -ல் மீண்டும் தொழிநுட்பக் கோளாறு… அவரச எண்கள் 100,112 தற்காலிகமாக மாற்றம்… காவல்துறை..!!

தொழிநுட்பக் கோளாறு காரணமாக காவல்துறை அவசர உதவி எண் 100,112 தற்காலிமாக செய்யப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அவசர உதவி எண் 100, 112க்கு பதிலாக தற்காலிகமாக 044 – 461100100, 044 -71200100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இது போன்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 23ம் தேதி, BSNL தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக Airtel, Vodafone மற்றும் jio வாடிக்கையாளர்களின் கைபேசியில் இருந்து காவல் அழைப்பு எண் 100/112 அழைப்புகளை காவல் கட்டுப்பாடு அறையில் பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் பொதுமக்கள் தற்காலிகமாக 044-46100100 மற்றும் 044-71200100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் அறிவிப்புகள் வெளியானது. இதையடுத்து, இந்த கோளாறு அடுத்த நாளே சரிசெய்யப்பட்டதன் காரணமாக மக்கள் அவரச அழைப்புக்கு 100 மற்றும் 112-ஐ தொடர்புகொள்ளலாம் என காவல்துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று மீண்டும் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதல் இந்த கோளாறை சரிசெய்ய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்த தற்காலிக எண்கள் செயலாப்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |