கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலமாக மாறியது காரைக்கால் மாறியதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இன்று குணமடைந்ததாகி அடுத்து தொற்று இல்லாத பச்சை மண்டலமாக காரைக்கால் மாறியுள்ளது. முன்னதாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக பச்சை மண்டலத்தில் இடம் பிடித்து இருந்தது. இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு சுரக்குடியைச் சேர்ந்த 37 வயது நபர், சொந்தமாக பஸ் வாங்கி, டிரைவராக ஓட்டி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உள்ள தமிழக பகுதிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இவர் வசித்து வந்த பகுதியில் ஏற்பட்ட தகராறு காரணமாக கைது செய்யப்பட்ட போது, சிறையில் அடைப்பதற்கு முன்னதாக அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கபக்கத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. யாருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்படவில்லை இந்த நிலையில், கொரோனா பாதித்த நபரும் தற்போது குணமடைந்துள்ளார். இதையடுத்து காரைக்கால் மாவட்டம் மீண்டும் பச்சை மண்டலத்தில் இடம் பிடித்துள்ளது.