Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கும் திட்டம் இல்லை – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியில் மீண்டும் ஊரடங்கு இல்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. நாளைக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் 41,182 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் டெல்லி 3ம் இடத்தில் உள்ளது. இதனால் டெல்லியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு போட உள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் டெல்லியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு போட உள்ளதாக வெளியான செய்திகள் உண்மை இல்லை என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என கூறியுள்ளார். டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு போடும் திட்டங்கள் எதுவும் இல்லை என அவர் கூறியுள்ளார். இதனிடையே அனைத்து கட்சிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் டெ ல்லி மாநில தலைவர் அனில் குமார் சவுத்ரி, ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக பரிசோதனை முறைகளை எளிதாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் நோய் கட்டுப்பாடு பகுதியில் வசிக்கக்கூடிய ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |