Categories
தேசிய செய்திகள்

கை இல்ல… கால் இல்ல… ஆணா?… பெண்ணா?… பிறந்த குழந்தையால் அதிர்ந்த மருத்துவர்கள்..!!

மத்திய பிரதேசத்தில் கை கால்கள் இல்லாமல் குழந்தை ஒன்று பிறந்து மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

மத்திய பிரதேச மாநிலம் விடிஷா மாவட்டத்தில் கை கால்கள் இல்லாமல் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது மருத்துவ உலகையே பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிறந்திருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதும் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரியவருகின்றது. இந்த குழந்தை குறித்து பெற்றோர் கூறுகையில் இது எங்களது மூன்றாவது குழந்தை என்றும் இதற்கு முன்பாகவே ஒரு மகனும் ஒரு மகளும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கோளாறுகளுடன் பிறந்த இந்த குழந்தை டெட்ரா அமேல்யா என்ற நோயின் அறிகுறியுடன் பிறந்துள்ளது. இதுவே கை கால்கள் இல்லாமல் இருப்பதை வகைப்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Sironj Tehsil என்ற பகுதியில் இருக்கும் ராஜீவ் காந்தி ஸ்மிரிதி மருத்துவமனையில் குழந்தை நல மருத்துவர் கூறுகையில்,  “குழந்தை நலமாகவே உள்ளது. ஆனால் குழந்தையின் உட்புற உறுப்புகள் உரிய வளர்ச்சி அடைந்துள்ளதா என்பதை தெரிந்துகொள்ள  பல சோதனைகள் செய்ய வேண்டியது அவசியம்” எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து குழந்தைக்கு தேவைப்படும் சோதனைகள் செய்ய மருத்துவர்களிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர் கூறியபோது, “குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறி ஒரு மரபணு கோளாறு. புதிதாகப் பிறக்கும் ஒரு லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த பாதிப்பு இருக்கின்றது. எனது வாழ்க்கையில் இதுவே முதல் வழக்கு” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |