Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைக்கு இதை பண்ணுங்க…. இதயத்துடிப்பு சீராகும்…!!

குழந்தைகளுக்கு எண்ணை தேய்த்து மசாஜ் செய்வதினால் இதயத் துடிப்பு சீராகும் உடல் எடை அதிகமாகும்.

குழந்தைகளுக்கு எண்ணை தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதோடு உடலின்  பிற உறுப்புகளை மூளையுடன் இணைக்கவும் உதவுகிறது. வேகஸ் நரம்பு உடலின் பிற உறுப்புகளை மூளையுடன் இணைக்கிறது. மேலும் இதன் வேலை புதிதாக பிறந்தவர்களின் செரிமான சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. குழந்தைகளுக்கு நல்ல தூக்கத்தை வரவழைக்க ஒரு நல்ல மசாஜ் மற்றும் சூடான குளியல் போதும். இந்த மசாஜ் செய்வதன் மூலம் சற்று நிதானம் அளிப்பதோடு குழந்தையை அமைதிப்படுத்தவும் , இதயத்துடிப்பை சீரான வேகத்தில் வைத்திருக்கவும் உதவும்.

குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்யும்போது அவர்களின் முழங்கால்களை பிடித்து வயிற்றுக்குள் மெதுவாக தள்ளுவது போல செய்யவும். இதை மூன்று அல்லது நான்கு முறை செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு அமைதியான நிலையை கொடுக்கவும்  பல தொந்தரவுகளிலிருந்து விடுபடவும் உதவும். மேலும் மசாஜ் செய்யும்போது முணுமுணுப்பது குழந்தையின் உடல் மற்றும் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் குழந்தைக்கும் தாய்க்கும் இடையில் ஒரு அழகான பிணைப்பு ஏற்படுகிறது.

Categories

Tech |