Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

பெண் குழந்தையை சாலையோரம் வீசி சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் சிவன் தியேட்டர் இருக்கும் பகுதியில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்ததும் பிறந்து சிலமணி நேரமேயான பெண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு சாலையோரம் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி – யில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Categories

Tech |