திருநெல்வேலி அருகே வளைகாப்பு நடத்த கணவன் வீட்டார் சம்மதிக்காத காரணத்தினால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியையடுத்த ஆத்தங்கரை பள்ளி நாச்சியார் தெருவில் வசித்து வருபவர் முகமது ராவி. இவருடைய மனைவி நிஷா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
இந்நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பம் தரித்தார். இந்நிலையில் அவருக்கு வளைகாப்பு நடத்த அவரது வீட்டார் திட்டமிட்ட நிலையில், அதனை முகமது ரபி வீட்டார் முற்றிலுமாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிஷா கணவரை விட்டுப் பிரிந்து அண்ணன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டில் ஆள் இல்லாத சமயத்தில் நேற்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது அண்ணன் காவல் நிலைத்தில் புகார் அளித்த சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் நிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இவரது தற்கொலைக்கான காரணம் கேட்டு அறிந்ததும் அது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.