Categories
உலக செய்திகள்

இன்ஸ்டாவில் விற்பதற்கு வைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்… 3 பேர் அதிரடி கைது..!!

இன்ஸ்டாகிராமில் குழந்தைகளை விற்பனை செய்ய பதிவிட்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

ஈரானில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்த குழந்தைகளை விற்பனைக்கு என பதிவிட்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து குழந்தைகளை மீட்டு உள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகளில் ஒரு குழந்தை 20 நாட்களே ஆன குழந்தை என்றும் மற்றொரு குழந்தை 20 மாதங்கள் ஆன குழந்தை என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கும்பல் விற்பனைக்கு வைத்த மூன்றாவது குழந்தையும்  கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மீட்கப்படவில்லை என தெஹ்ரான் நகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு விலை நிர்ணயம் செய்யும் பொழுது ஒரு குழந்தையின் விலை 9,500 டாலர் என்றும் மற்றொரு குழந்தைக்கு 11,800 டாலர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஏழைக் குடும்பங்களில் இருந்து குறைந்த தொகையை கொடுத்து குழந்தைகளை வாங்கி இணையதளம் மூலம் விற்பனை செய்து வருகின்றது. தற்போது அவர்களிடம் இருந்து நீக்கப்பட்ட இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு 1,500 டாலர் என்றும் மற்றொரு குழந்தைக்கு 2,300 டாலர் என்று தொகையை வாங்கியுள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்ஸ்டாகிராமில் குழந்தையை விற்பனைக்கு வைத்த செயல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனம் விசாரணைக்கு உறுதி அளித்துள்ளது. மனித சுரண்டலுக்கு வழி செய்யும் எந்த நடவடிக்கைகளுக்கும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடமில்லை என்றும் அது குழந்தைகளை தத்தெடுக்க விற்பனை செய்வதாக இருந்தாலும் சட்ட விரோதமாகவே கருதப்படும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |