ஆறு மாத கைக்குழந்தையை தாயே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை பகுதியில் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இரண்டாவது மனைவி புஜ்ஜி. இவருக்கு ஆறு மாதமான பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. இவர் தனது கணவரை விட்டு தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் புஜ்ஜியிடம் ஒரு ஜோதிடர் நாகதோஷம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த நாகதோஷத்தைப் போக்க சிவன் படத்திற்கு முன்பு இரவு நேர பூஜையை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று பூஜையின் கடைசி நாள் என்பதால் தனது 6 மாத குழந்தையை சிவன் படத்திற்கு முன்பாக போட்டு அதன் கழுத்தை அறுத்து நரபலி கொடுத்துள்ளார். இதனையடுத்து வெகுநேரமாக கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குழந்தை இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புஜ்ஜியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.