மருத்துவமனைக்குள் செவிலியர் போன்று வேடமிட்டு பிறந்த குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தெற்கு மிசோரத்தின் திபெராகாட் கிராமத்தில் சுரோட்டா சக்மா மற்றும் திலோன் சக்மா ஆகிய தம்பதிகள் வசித்து வருகின்றனர். இதில் திலோன் சக்மாவுக்கு மகப்பேறுக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கடந்த வாரம் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நான்கு நாட்களுக்குப் பிறகு குழந்தை கடத்தல் சேர்ந்த பெண் ஒருவர் செவிலியர் போன்று வேடமிட்டு மருத்துவமனைக்குள் நுழைந்து, பிறந்த குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார்.
குழந்தையின் தாய் என் குழந்தையை எடுத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டபோது, குழந்தையை குளிப்பாட்ட செல்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பி அந்த தாயும் குழந்தையை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளார். நீண்டநேரமாகியும் அந்த செவிலியர் வராததால் பதறிப்போன தாய், அந்தக் குழந்தையை கடத்தி சென்று உள்ளத்தை உணர்ந்தார், இதையடுத்து நடந்ததை உறவினர்களிடம் கூறினார். பின்னர் அவர்கள் குழந்தை கடத்தல் மற்றும் போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.