சென்னையில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் சுஷில்ஹரி சர்வதேச பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பள்ளியில் படிக்கும் மாணவனின் தாயார் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. கடந்த 2010-ம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு சிபிசிஐடி வழக்கு விசாரணையை நடத்தி வந்தது. அதன் பிறகு சிவசங்கர் பாபா தன் மீது இருக்கும் வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு ஏற்படும் காலதாமதத்தை கருத்தில் கொண்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் சிபிசிஐடி மற்றும் பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் வழக்கை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தி ஒரு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என்றும், அதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் மதுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என்றும் கூறினார். அப்போது சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தள்ளுபடி செய்த மனுவை, ரத்து செய்யக்கூடாது என்று மனு தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனு குறித்து சிவசங்கர் பாபா உரிய முறையில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் வழக்கின் விசாரணையை நீதிபதி நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.