Categories
இந்திய சினிமா சினிமா

“பாகுபலி-பரமசுந்தரி காதல்”…. உறுதிப்படுத்திய பிரபல டாப் ஹீரோ…. என்ன சொன்னார் தெரியுமா….? வைரல் வீடியோ இதோ….!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது கேஜிஎப் இயக்குனருடன் இணைந்து சலார் மற்றும் ஓம்ராவத் இயக்கத்தில் ஆதி புருஷ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சனோன் அண்மையில் பிரபாசை திருமணம் செய்து கொள்வதற்கு எனக்கு சம்மதம் என ஒரு பேட்டியில் கூறினார்.

இதனையடுத்து கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில், நடிகர் வருண் தவான் மற்றும் நடிகை கீர்த்தி சனோன் கலந்து கொண்டனர். அப்போது கரண் நடிகர் வருணிடம் கீர்த்தியின் டேட்டிங் குறித்து கேட்டார். அப்போது வருண் கீர்த்தி இன்னொருவரின் இதயத்தில் இருக்கிறார் என்று கூற உடனே அவரை கீர்த்தி தடுத்து நிறுத்தினார்.

இதனையடுத்து கீர்த்தியின் காதலர் மும்பையைச் சேர்ந்தவர் அல்ல என்றும், தற்போது தீபிகா படுகோனே உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்றும் வருண் கூறினார். இந்நிலையில் நடிகை தீபிகாவுடன் நடிகர் பிரபாஸ் தான் project k என்ற சயின்ஸ் பிக்ஸன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் காரணமாக கீர்த்தி மற்றும் பிரபாஸ் காதலிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் நடிகர் வருண் தவான் பேசிய வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |