தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையை அடுத்த நாவலூரில் தாய், மகள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதை ஆராய்ந்ததில் தாய்க்கு பி ஏ 2 வகை ஓமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதனைப்போலவே மகளுக்கு பி ஏ 4 வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த வகை பாதிப்பு இந்தியாவில் வேறு எங்கும் பதிவாகவில்லை. மற்ற மாநிலங்களில் இந்த பாதிப்பு உள்ளதா என்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.
இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தாய் மகள் இருவரும் கொரோனா தடுப்பூசி சிறுத்தை கொண்டவர்கள். இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். தற்போது இருவருக்கும் நெகட்டிவ் என ரிப்போர்ட் வந்துள்ளது. இந்த வகை தொற்று, தொண்டை வலி, சளி மற்றும் காய்ச்சல் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசியை செலுத்தி கொள்ளுங்கள் என்று அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இந்தியாவில் கொரோனா நான்காவது அலை குறித்த எச்சரிக்கையை ஐஐடி மருத்துவ வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர். அதனால் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு வெளியாகுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில் இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் புதிய வகை தொற்று பதிவாகியிருப்பதை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.