Categories
மாநில செய்திகள்

“பி.எட் மற்றும் எம்.எட் கல்லூரிகள்” மாணவர்கள் சேர்க்கைக்கு தடை…. ஆசிரியர்கள் கல்வியியல் பல்கலை.ம் அறிவிப்பு….!!!!

பி.எட் மற்றும் எம் எட் கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கல்வியியல் பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்புக்கு விண்ணப்பிக்காத பி.எட் கல்லூரிகள் மாணவர்களை சேர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள பிஎட் மற்றும் எம்எட் பட்டப்படிப்புகள் நடத்தும் கல்லூரிகள் ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும். மேலும் இணைப்புக்கு விண்ணப்பிக்காத கல்லூரிகள் மாணவர்களை சேர்க்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |