நியூஸிலாந்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்ததாகவும் அடுத்த 3 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார் .
பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த மிக ஆபத்தான மாபெரும் கொரோனா தொற்று நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் மூன்று பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது .அதனால் நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா அடுத்த 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்த நியூஸிலாந்து மேற்கொண்ட அதே முயற்சிகளை இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தீவிரமாக மேற்கொள்ள போவதாக பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்கள் தங்களை வீட்டினுள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளிவர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.இதனைத்தொடர்ந்து மாணவர்கள் பள்ளியிலிருந்து வராமல் வீட்டில் இருக்கும் படியும் ஊழியர்கள் தங்களின் வேலைகளை வீட்டிலிருந்து செய்யும் படி கேட்டுக்கொண்டுள்ளார். இதனால்ஆக்லாந்துக்கு வரும் வாகனங்களையும் ஆக்லாந்திலிருந்து செல்லும் வாகனங்களையும் காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.