ஆயுர்வேத முறைப்படி உணவின் இறுதியில் நீர் அருந்துவது என்பது விஷத்தைக் உட்கொள்வதற்கு ஒப்பானது. இதன் காரணமாகவே நம் உடலில் வாயு மற்றும் அமிலம் உருவாக தொடங்குகிறது.
உணவை உண்டு முடித்தபின் உடனே நீர் அருந்துவது நம் உடலில் 103 விதமான வியாதிகளை உண்டாக்குகிறது. இங்கு ஆயுர்வேத முறைப்படி நீர் அருந்துவதற்கான சரியான வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
இடைவெளி அவசியம்
உணவு மற்றும் நீர் ஆகியவற்றுக்கு இடையே குறைந்தது ஒன்றரை மணி நேரத்தில் இருந்து இரண்டரை மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். இந்த இடைவெளி நாம் வாழ்கின்ற இடத்தின் தன்மை சார்ந்து மாறுபடுகிறது. மலைப்பகுதிகளில் இந்த கால இடைவெளி அதிகமானதாகவும் மற்றும் சமவெளி பகுதி, வெப்பம் மிகுந்த இடங்கள் ஆகியவற்றில் இது குறைவானதாகவும் உள்ளது. நாம் வாழ்கின்ற சுற்றுப்புற பகுதிகளை சார்ந்து நம் உடல் உணவை செரிக்கும் தன்மை மாறுபடுவதால் இந்த கால இடைவெளியும் மாறுபடுகிறது.
40 நிமிடங்களுக்கு பின் வெதுவெதுப்பான நீரை எடுக்கலாம். உணவு உண்டு முடிந்த பின்பு தொண்டையை சுத்தம் செய்யும் பொருட்டு ஒன்று அல்லது இரண்டு மடங்கு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்களிலிருந்து பெறப்படும் சாற்றினை காலை உணவிற்கு பின்னும் மோரை மதிய உணவிற்கு பின்னும் எடுத்து கொள்ளலாம். இரவு உணவிற்கு பின் பால் அருந்தலாம். காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய முதல் விஷயம் நீர் அருந்துவது நம் உடலின் வெப்பநிலைக்கு ஏற்ப சூடான தேநீர் அருந்துவது போல வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளலாம்.
இது நம் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும். தாமிர பாத்திரத்தில் உள்ள நீர் வெது வெதுப்பாக வைத்து குடிக்கலாம். மண்பானையில் வைக்கப்பட்டிருக்கும் நீர் என்றால் வெது வெதுப்பாக வேண்டிய அவசியமில்லை. 18 வயதிற்கு குறைவானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட 1.5 லிருந்து 2.0 செம்பு பாத்திரத்தில் நீரை பயன்படுத்துங்கள். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக பயன்பாட்டிற்குப் பிறகு இரண்டு வாரங்களுக்கு அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
குளிர்ச்சியான நீர் வேண்டாம்
எப்போதும் குளிர்ச்சியான நீரை குடிக்காதீர்கள். வெதுவெதுப்பான அல்லது உடல் வெப்ப நிலைக்கு ஏற்ற நிலையில் உள்ள நீரை மட்டும் குடியுங்கள். குளிர்ந்த நீரை குடிப்பது நம் உடலில் பல்வேறு உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை குறைகின்றது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் நம் உடல் உறுப்புகளை பலவீனமுற செய்து அவற்றை செயலிழக்க செய்கிறது. இதன் காரணமாக மாரடைப்பு, சிறுநீரக கோளாறு மற்றும் மூளையில் ரத்த ஒழுங்கு போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாக இந்த குளிர்ச்சியான நீர் உள்ளது.