உலகில் இருக்கின்ற பெண்கள் அனைவரும் கொண்டாடப்பட வேண்டியவர்களில் முதலிடத்தில் இருக்கிறார்கள். அப்பெண்கள் அனைவரையும் ஒவ்வொரு ஆண்களுமே மதிக்க வேண்டும். தாய், சேய், தாரம், அக்கா, சகோதரி, என ஆண்களை உருவாக்கும் இவர்கள் அனைவருமே போற்றப் பட வேண்டியவர்கள்.
ஆனால் இன்றைய காலத்தில் அப்படி எதுவுமே நடப்பதாக தெரியவில்லை. ஆம்,பெண்களுக்கான பாதுகாப்பு ஆண்களிடம் இருந்து கிடைப்பதே இல்லை. பிறந்த சிறு குழந்தை தொடங்கி முதியவர் வரை வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே சில கொடூரர்கள் பாலியல் தொல்லை, கொடுக்கின்றனர்.
இதுபோன்று எண்ணில் அடங்காத எவ்வளவோ கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன. பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இன்றளவும் கூட பல பெண்கள் சீரழித்து கொல்லப்பட்டும் இருக்கின்றனர். ஆண்களை விட பெண்கள் பலம் குறைந்தவர்கள் என்று சொல்வார்கள். அப்படியில்லை, பெண்கள் பலமானவர்கள் தான். ஆனால் ஆண்களால் அவர்கள் பலவீனப்படுத்தப்படுகின்றனர்.
இதனை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தினாலும் சரி, பல சட்டங்கள் போட்டு தடுத்தாலும் சரி குறைவதாக தெரியவில்லை. இந்த நிலையில் 4 சிங்க பெண்கள் விழிப்புணர்வு நடனம் ஒன்றை செய்துள்ளனர். அதில், 4 பெண்களும் நிர்வாணமாக உடல் முழுவதும் புலியின் நிறத்தில் வர்ணத்தை பூசி பெண்கள் புலி போன்றவர்கள் என்பதை துணிச்சலோடு நிரூபித்துள்ளனர்..! இதோ வீடியோ. இந்த வீடியோ பெண்களுக்கு மன உறுதியை தரும் வகையில் அமைந்துள்ளது.
Mind blown! https://t.co/czQumid6lP
— World Publicist (@IsimaOdeh) February 21, 2020