1984 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து சிறப்பித்தது. அதே வருடம் மத்திய அரசிடம் இருந்து அர்ஜுனா விருது பெற்றார்.
1985 ஆம் வருடம் ஜகார்த்தா ஆசிய தடகள மீட்டில் P.T.உஷாவுக்கு சிறந்த பெண் தடகள வீராங்கனைகான உலகக்கோப்பை வழங்கப்பட்டது.
1986 ஆம் வருடம் சியோல் ஆசிய விளையாட்டு கழகத்தின் சார்பாக சிறந்த தடகள விளையாட்டு வீராங்கனைகான அடிடாஸ் கோல்டன் ஷூ விருது கொடுக்கப்பட்டது.
1984, 1985, 1986, 1987 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் சிறந்த பெண் தடகள வீராங்கனை விருது P.T.உஷாவுக்கே கொடுக்கப்பட்டது.
1999 ஆம் ஆண்டு கேரள விளையாட்டு பத்திரிக்கையாளர் விருது வழங்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகம் உஷாவுக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவப்படுத்தி உள்ளது