குடியரசு தினத்தன்று சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாடு காவல் துறையின் 24 காவலர் அலுவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குடியரசு தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை (இன்று) இந்திய குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்காக காவல் துறையினருக்கான விருதுகள் அளிக்கப்படவுள்ளன.
இந்தாண்டு அவ்விருதுகளை வாங்கும் காவலர்கள்:
1) செந்தில்குமார் – காவல் ஆணையர் (சேலம்)
2) ரஜேஸ்வரி – காவல் கண்காணிப்பாளர் (சென்னை)
3) மயில் வாகனன் – காவல் துணை ஆணையர் (சென்னை)
4) ரவிச்சந்திரன் – காவல் துணை ஆணையர் (சென்னை)
5) சௌந்தரராஜன் – காவல் துணை ஆணையர் (சென்னை)
6) வசந்தன் -காவல் துணை கண்காணிப்பாளர் (சென்னை)
7) மதியழகன் – காவல் துணை கண்காணிப்பாளர் (நாகர்கோவில்)
8) அனில்குமார் – காவல் துணை கண்காணிப்பாளர் (நெல்லை)
9) சுந்தரராஜ் – காவல் உதவி ஆணைர் (திருப்பூர்)
10) ராமதாஸ் – காவல் துணை கண்காணிப்பாளர் (சென்னை)
11) ரவிக்குமார் – காவல் துணை கண்காணிப்பாளர் (கோவை)
12) அன்வர் பாட்ஷா – காவல் உதவி ஆணையர் (சென்னை)
13) ரமேஷ்குமார் – காவல் ஆய்வாளர் (நாகை)
14) நந்தகுமார் – காவல் ஆய்வாளர் (சென்னை)
15) நடராஜன் – காவல் ஆய்வாளர் (ஈரோடு)
16) திருப்பதி – காவல் ஆய்வாளர் (தூத்துக்குடி)
17) மணிவேலு – சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (சென்னை)
18) ஜெயச்சந்திரன் – சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (சென்னை)
19) டேவிட் – சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (சென்னை)
20) சிவக்குமார்- சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (சென்னை)
21) சந்திரசேகரன் – சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (சென்னை)
இவர்களுடன் கூடுதல் காவல் துறை இயக்குனர்களான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அபய் குமார் சிங், சைலேஷ் குமார் யாதவ், காவல் கண்காணிப்பாளர் பெத்துவிஜயன் உட்பட 24 காவல் அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.