தமிழகத்தின் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த மாணவி வினிஷா என்பவர் சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்துள்ளார். இவருக்கு தமிழக முதல்வர் உட்பட பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வினிஷாவிற்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் பரவவே, பலரும் மாணவி வினிஷாவிற்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.