Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவனுங்க பயங்கரவாதின்னு நினைச்சுக்கோங்க – எம்.பி ரவிக்குமார் ஆவேசம் …!!

விழுப்புரத்தில் 10ஆம் வகுப்பு சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு சிறுமி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி இன்று காலை மரணமடைந்தார்  என்றது தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகளை கட்சி எம்.பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,  மேலும், சிறுமி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு சம்பவம் தொடர்பாக வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். இது போன்ற செயலில் ஈடுபடுவோரை பயங்கரவாதிகளாக கருதி நடவடிக்கை எடுக்கவேண்டும். சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் அவர் தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |