தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட உள்ள அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம் திரைப்படத்திற்கான பணியில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய பங்கு வகுக்கிறார் ,இது பலருக்கு பிடிக்காதா நிகழ்வாக அமைந்துள்ளது.
தமிழ் திரைப்படம் என்றாலே தல தளபதி ரஜினி கமல் ஆகியோரின் திரைப்படத்திற்கு தான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு என்பது காத்திருக்கும் ஆனால் இவை அனைத்தையும் முறியடித்து பிற மொழிப் படமான குறிப்பாக ஹாலிவுட் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் எப்பவும் சிறப்பான வரவேற்பு என்பது காத்திருக்கும் அதிலும் குறிப்பாக அவெஞ்சர்ஸ் மார்வெல் படங்களுக்கு சற்று கூடுதலாகவே வரவேற்பு என்பது கிடைக்கும்.
கடந்த வருடம் வெளியான அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படம் ஆனது குறைந்த காலத்தில் இதுவரை தமிழ் திரைப்படம் அடிக்காத வசூலை தமிழகத்தில் அடித்து மிகப்பெரிய சாதனை புரிந்தது மேலும் இந்த திரைப்படமானது இரண்டு வாரத்திற்கு மேல் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியதும் குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து இந்த படத்திற்கான அடுத்த பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்
இந்நிலையில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் என்ற தலைப்புடன் இந்த வருடம் இந்த திரைப்படமானது வெளியாக உள்ளது இந்த படத்திற்கான தமிழ் மொழிபெயர்ப்பிற்கான பணியில் ஏஆர் முருகதாஸ் விஜய் சேதுபதி ஆண்ட்ரியா ஆகியோர் இணைந்து பணிபுரிந்துள்ளனர் அதில் ஏ ஆர் முருகதாஸ் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்பட வசனத்தை தமிழில் மொழி பெயர்த்து எழுதியுள்ளார் மேலும் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் அயன்மேன் கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்து வசனத்தை பேசி உள்ளார்
மேலும் நடிகை ஆண்ட்ரியா அவர்களும் ஒரு அவெஞ்சர்ஸ் கதாபாத்திரத்திற்கு டப் செய்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதில் பிரபல கதாபாத்திரமான அயன் மேன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி அவர்கள் டப் செய்தது பலருக்கு பிடித்தும் பலருக்கு பிடிக்காமலும் இருந்து வருகிறது குறிப்பாக மார்வெல் அவெஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு இப்படியான நிகழ்வு முகம் சுளிக்க வைத்துள்ளது மேலும் சமூக வலை தளங்களிலும் இந்த சம்பவம் குறித்து மீம்ஸ் கிரியேட்டர்ஸ் புதிது புதிதாக மீம்களை தயார் செய்து விஜய் சேதுபதி அவர்களை கலாய்த்து வருகின்றனர் இது தற்பொழுது வைரலாகி வருகிறது..