ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009ம் வருடம் வெளியான படம் அவதார். இந்த படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்து மிகப் பெரிய அளவில் வெற்றிபெற்றது. இதையடுத்து தற்போது இந்த படத்தின் 2ஆம் பாகம் இன்று வெளியாகிறது. இதற்கு அவதார் : தி வே ஆஃப் வாட்டர் என தலைப்பு வைத்து உள்ளனர். இன்று வெளியாகி இருக்கும் இந்த படத்தின் பிரிமீயர் காட்சிகள் சென்ற சில நாட்களாக ஒவ்வொரு நாடுகளிலும் நடந்து வருகிறது.
இந்த படத்தை பிரிமீயர் காட்சியில் பார்த்த பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய விமர்சனத்தை சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரையிலும் படம் பார்த்த அனைவரும் சூப்பர் என்று தான் கூறிவந்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் சிம்பு நேற்று அவதார் 2 திரைப்படத்தை தாய்லாந்தில் பார்த்து உள்ளார். பின் சிம்பு படத்தை பார்த்து விட்டு “க்ளாப்” எமோஜியை பதிவிட்டு படம் அருமையாக உள்ளது என்பதை கூறியுள்ளார்.