பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கூடலூர் பகுதியில் தங்கப்பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான வெள்ளத்துரை என்ற மகன் இருக்கின்றார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி இருந்த உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துலட்சுமி தனது மாமனாரான தங்கப்பாண்டியிடம் குடும்ப சொத்தினை தனது மகன் அல்லது கணவர் பெயருக்கு எழுதிக் வைக்குமாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து தங்கப்பாண்டி சொத்தினை எழுதி வைப்பது பற்றி நீ எதுவும் கூறக்கூடாது என்று தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனால் மனவேதனையுடன் முத்துலட்சுமி இருந்துள்ளார்.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த முத்துலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து முத்துலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று உடல் கருகிய நிலையில் கிடந்த முத்துலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.இதுகுறித்து முத்துலட்சுமியின் தந்தையான மல்லுத்துரை காவல் நிலையத்திற்கு சென்று தனது மகளான முத்துலட்சுமியை அவரது மாமனார் தங்கப்பாண்டி மற்றும் மாமியார் வெள்ளத்தாய் ஆகியோர் இணைந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இதனால் அவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்த தனது மகள் முத்துலட்சுமி வீட்டிற்குள் ஓடிச் சென்று மிகுந்த மன உளைச்சலால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார் என்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி மருத்துவமனைக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனது மருமகளை தற்கொலை செய்ய தூண்டிய குற்றத்திற்காக தங்கபாண்டி மற்றும் வெள்ளத்தாயை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.