கொரோனாவால் மீண்டும் ஆட்டோமொபைல் துறையில் பெரும் வேலை இழப்புகள் ஏற்படும் என வினியோகஸ்தர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
கொரோனா தாக்கத்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்பால் ஆட்டோமொபைல் துறையில் ஏற்படும் வீழ்ச்சி மீண்டும் வேலை இழப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வாகன விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதற்க்கு முன்னரும் ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் 2 லட்சத்திற்கும் அதிகமான வேலை இழப்புகள் நிகழ்ந்தது.
வாகனத்தின் தேவை அதிகரித்தால் தான் இந்த சூழலை எதிர்கொள்ள முடியும் என விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு கூறியிருக்கின்றது. அதோடு வேலை இழப்பு என்பது இறுதி கட்டமே. இதுவரை எந்த விற்பனை அங்காடி முகவர்களும் முற்றிலுமாக தங்கள் கடைகளை அடைத்துவிடவில்லை. இதனால் சந்தையை தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.