கனரக வாகனம் ஆட்டோ ரிக்ஷா மீது மோதியதில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அசாம்- திரிபுரா எல்லையை ஒட்டியுள்ள கரீம்கஞ்ச் மாவட்டத்தில் பதர்கண்டி என்ற தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை கனரக வாகனம் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனை அடுத்து அந்த கனரக வாகனமானது எதிரே வந்த ஆட்டோ ரிக்ஷாவின் மீது மோதியுள்ளது. இக்கோர விபத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்த 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் இவர்கள் சத் பூஜையை முடித்துவிட்டு திரும்பி வந்தபோது தான் இந்த விபத்து நடந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இறந்தவர்களின் உடல்களை போலீசார் மீட்டு கரீம்கஞ்ச் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.