Categories
தேசிய செய்திகள்

“வாகன காப்பீடு”… அவசியம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்…!!!

ஆண்டுதோறும் வாகன காப்பீட்டை புதுப்பிக்க வேண்டியது மிக அவசியம்.  அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காப்பீட்டை புதுப்பிக்கும்போது , 5 நிமிடம் கூட எந்தவகையான காப்பீட்டு எடுக்க போகிறோம். அதில் எவற்றிற்கெல்லாம் பயன்படுகிறது என்பது பற்றி பலரும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், அவற்றை பற்றி தகவல் தெரிந்துகொண்டால் நமக்கேற்ற காப்பீட்டை தேர்வு செய்வதோடு, பிரிமியம் தொகையையும் சேமிக்க முடியும் . எனவே, வாகன காப்பீடு பற்றிய அடிப்படையான விஷயங்களை தெரிந்துகொள்ளுகள்.

மோட்டார் வாகன இன்சூரன்ஸ் என்பது மோட்டார் வாகனச் சட்டம் (1988) கீழ் இந்தியாவில் அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களுக்கு காப்பீடு புதிப்பிக்க வேண்டும்.

மோட்டார் வாகன இன்சூரன்ஸ் வகைகள்:

வாகனங்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களில்

முழுக் காப்பீடு,

மூன்றாம் தரப்புக் காப்பீடு (Third Party Cover)

என இரண்டு வகைகள் உள்ளன.

பொது இடங்களில்  வாகனத்தைப் பயன்படுத்துவதால் மூன்றாவது நபரின் உயிருக்கு அல்லது சொத்துக்கு ஏற்படும் சேதத்துக்கு வாகன உரிமையாளரே பொறுப்பாவார்கள். எனவே, மூன்றாவது நபர் காப்பீடு என்பது அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாகும்.

மூன்றாவது நபர் காப்பீட்டின் மூலம்,  வாகனம் மோதி யாருக்காவது பாதிப்பு ஏற்படுகிறதோ அவருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும். காப்பீடு எடுத்தவருக்கு இழப்பீடு கிடைக்காது. முழுக் காப்பீடு செய்வது என்பது வாகன உரிமையாளரின் விருப்பத்துக்கு உட்பட்டது. முழுக் காப்பீடு செய்திருந்தால் மட்டுமே, சாலை விபத்து, தீ விபத்து, புயல், வெள்ளம், நிலநடுக்கம், திருட்டு ஆகியவற்றின்போது வாகன உரிமையாளர் இழப்பீடு கோர முடியும்.

Categories

Tech |