Categories
மாநில செய்திகள்

எரிபொருள் விலைக்கேற்ப ஆட்டோ கட்டணம் உயர்வு…. தமிழக அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு….!!!!

சென்னையில் வசித்து வரும் வழக்கறிஞர் எஸ்.வி. ராமமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு ஆட்டோ கட்டணமானது மாற்றி அமைக்கப்படவில்லை. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை போன்றவைகள் உயர்ந்து வருவதால் ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். கடந்த 7 வருடங்களாக ஆட்டோ கட்டணமானது மாற்றி அமைக்கப்படாததால் பல ஆட்டோ ஓட்டுநர்கள் தாங்களாகவே கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பிறகு கடந்த ஏப்ரல் மாதம் எரிபொருள் கட்டணத்திற்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே சொன்னபடி ஆட்டோ கட்டணங்களை மாற்றி அமைப்பதோடு அந்த கட்டணமானது ஆட்டோ மின் மீட்டர்களில் தானாகவே வருமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தமிழக அரசு 4 வார காலத்திற்குள் மனு தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

 

Categories

Tech |