கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் நிவாரண நிதியுதவி கேட்டு மனு அளித்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தங்களின் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவிவரும் காரணத்தினால் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடியும் வரை ஆட்டோ டிரைவர்களுக்கு மாதந்தோறும் 5000 ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனை அடுத்து இன்சூரன்ஸ், பெர்மிட், வரி மற்றும் எப்.சி. போன்ற கட்டணத்தை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதன்பின் வாகனம் மூலம் பெறப்பட்டுள்ள மாத கடன் செலுத்துவதற்கு அவகாசம் அளிக்க வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை எடுத்து நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவு செய்யாதவர்களுக்கு அரசு நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மனுவினை அளிக்கும் போது மாவட்ட தலைவர் கோமதி சங்கர், மாவட்ட துணைத்தலைவர் முருகன், மாவட்ட செயலாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர், செங்கோட்டை நகர தலைவர் மூர்த்தி, இந்து ஆட்டோ முன்னணி பொறுப்பாளர்கள், உள்ளிபட பலரும் உடன் இருந்துள்ளனர்.