மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் தம்பிக்கு பதிலாக அண்ணனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்லவன் மேடு பகுதியில் செந்தில்குமார் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரகு என்ற தம்பி உள்ளார். இவரின் மீது 2 கொலை வழக்குகள் இருக்கின்றன. இந்நிலையில் தனது தந்தைக்கு ஈமச்சடங்கு நடத்துவதற்காக செந்தில்குமார் குடும்பத்தினருடன் அமர்ந்து வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து திடீரென மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் செந்தில்குமாரின் வீட்டிற்குள் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். மேலும் அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் ரகுவை தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.
இதனால் கோபம் அடைந்த அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் ரகுவின் அண்ணனான செந்தில்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் ரத்த வெள்ளத்தில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.