ஆட்டோ டிரைவர் பதினைந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் ராஜூகான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு ராஜூகான் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான ஆட்டோ டிரைவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவரை பொதுமக்கள் பிடித்து அடித்து, உதைத்ததோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பிறகு 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.