Categories
பல்சுவை

“ஆட்டிசம்” பெற்றோர் அறிந்துகொள்ள வேண்டியவை..!!

பெற்றோர்களும் சமுதாயத்தினரும் ஆட்டிசம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகிறது

குழந்தைகளின் மூளை நரம்பில் ஏற்படும் பாதிப்பின் காரணமாக ஆட்டிஸம் ஏற்படுகிறது. இது மூளை வளர்ச்சி மன வளர்ச்சி குறைபாடு காரணமாக ஏற்படுவது அல்ல என்பதை பெற்றோர்களும் சமுதாயத்தினரும் புரிந்து கொள்ளுதல் அவசியமாகும். இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆட்டிசம் குழந்தைகளுக்கு குறைபாடாக இருந்தாலும் பெற்றோர்களின் கவனிப்பின் மூலம் குழந்தைகளை திறமைசாலிகளாக மாற்றியமைக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். உலகம் முழுவதும் மிகவும் வேகமாக அதிகரித்துவரும் குறைபாடுகளில் ஒன்றானது ஆட்டிசம். தலைசிறந்த நாடான அமெரிக்காவில் 150 பேரில் ஒருவருக்கு இந்த குறைபாடு ஏற்பட்டு வருகிறது என ஆய்வு ஒன்று கூறுகிறது.

இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேலான குழந்தைகள் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களாகவே இருக்கின்றனர். குழந்தைகள் இந்த குறைபாட்டுடன் இருந்தாலும் அவர்களிடம் ஏதேனும் ஒரு திறன் அதிக அளவில் இருக்கும். அதனை கண்டறிந்து வெளிக்கொண்டு வருவது பெற்றோர்களின் கடமையாகும். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அமைதியாக இருப்பது நடக்காத விஷயம். சத்தம் போட்டுக்கொண்டு ஓரிடத்தில் அமைதியாக அமராமல் எதையாவது  செய்துகொண்டே இருப்பார்கள்.

அவர்களுக்கு தகுந்த பயிற்சிகளை கொடுக்கும் பொழுது அவர்களிடம் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டுவர முடியும். இதன் மூலம் அவர்களது திறமையையும் வெளிக்கொண்டுவர முடியும் என்கின்றனர் பயிற்சியாளர்கள். பெற்றோர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் அதிக அளவு நேரத்தை செலவழிப்பதால்  குழந்தைகளும் சகஜமாகப் பழகி பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் கொள்வார்கள்.

Categories

Tech |