அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானுக்கு எந்தவித பாதுகாப்பும், முன் வரவேற்பும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு வாஷிங்டன் சென்றிருந்த பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான உள்நாட்டு விமர்சகர்களுக்கு பாகிஸ்தான் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை கண்டித்து பாகிஸ்தான் நாளிதழ்களில் வெற்றுத் தாள்களை தலையங்கமாக அச்சிட்டு வருகின்றனர்.
இதையடுத்து அமெரிக்காவின் ஊடகங்களையும் புறக்கணிக்க இம்ரான் கான் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்தது. தீவிரவாதம் தொடர்பான முடிவுகளில் பாகிஸ்தான் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இம்ரான் கானுக்கு அமெரிக்கா கடும் நெருக்கடி கொடுத்துள்ளது. வர்த்தக நோக்கத்திற்காக மட்டுமே ட்ரம்ப் இம்ரான் கானை சந்திக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக சிக்கன நடவடிக்கையாக பயணிகள் விமானத்தில் சென்ற இம்ரான்கான் அமெரிக்காவின் டல்லாஸ் விமான நிலையத்தில் இறங்கிய போது அவரை வரவேற்க அமெரிக்க அதிகாரிகள் யாரும் வரவில்லை என்றும், பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் குரேஷி , அமெரிக்கா-பாகிஸ்தான் தூதரகர் ஆசி ஆகியோர் மட்டுமே இம்ரான் கானை வரவேற்றதாகவும் , பயணிகளுடன் சக பயணியாக எந்த பாதுகாப்புமின்றி விமான நிலையத்தை விட்டு இம்ரான் கான் வெளியேறியதாகவும் கூறி பாகிஸ்தான் மீடியா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.