ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லெபனான் நாட்டில் பாலஸ்தீன முகாம்கள் அமைந்துள்ளன. அந்த முகாம்கள் அனைத்தும் ஹமாஸ் மற்றும் ஃபட்டாஹ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் துறைமுக நகரமான டயரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் நின்று கொண்டிருந்த டீசல் டேங்கர் லாரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீயானது அருகிலிருந்து மசூதிக்கு பரவியுள்ளது. குறிப்பாக அந்த மசூதியை ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்கள் பதுக்கி வைக்கும் கிடங்காக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் அங்கு பரவிய தீயினால் ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியது. இதனால் அங்கிருந்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் சடலங்களை மீட்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது