Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvSAF: 50 ஓவர் போட்டியில் கில்லி… ஆனால் டி20யில் தடுமாற்றம்… இன்று வெல்லுமா?

அபுதாபியில் இன்று நடைபெறும் முதல் குரூப் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் தற்போது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடை பெற்று வருகிறது. முதற்கட்டமாக சூப்பர் 12 சுற்றில் இடம்பிடிப்பதற்கான தகுதி சுற்று போட்டிகள் மற்றும் பயிற்சி போட்டிகளும் நடந்து முடிந்துவிட்டது.. இந்த நிலையில் இன்று முதல் குரூப் 12 போட்டிகள் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அபுதாபியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன..

ஆஸ்திரேலிய அணி குறித்து பார்க்கலாம் :

50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த அணி ஆஸ்திரேலியா.. ஆனாலும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்னும் ஏமாற்றம் மட்டுமே அந்த அணிக்கு மிஞ்சியிருக்கிறது.. ஒருமுறைகூட 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றது கிடையாது.. இந்த வரலாற்றை மாற்றியமைக்கும் நம்பிக்கையில் இம்முறை காத்திருக்கிறது ஆஸ்திரேலியா..

2010ஆம் ஆண்டு வெஸ்ட்இண்டீசில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய ஆஸ்திரேலிய அணி, இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது..

இந்தமுறை ஆரோன் பின்ச் தலைமையில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாக வேகபந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.. அதிரடி தொடக்க  வல்லமை படைத்த டேவிட் வார்னர், அனுபவ வீரர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஆல்ரவுண்டர்களான மிட்செல் மார்ஸ், கிளன் மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டியன், டேனியல் சாம்ஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் இருக்கிறார்கள்..

மேலும் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேஸில்வுட்,  கேன் ரிச்சர்ட்சன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். எனினும் 20 ஓவர் போட்டிகளில் சற்று ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெளிப்படுத்தும் ஆற்றலை 20 ஓவர் போட்டிகளில் அந்த அணி வெளிப்படுத்த தவறி வருகிறது. ஐசிசி 20 ஓவர் தரவரிசையில் 6வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி குறைகளை நிவர்த்தி செய்து முதன் முறையாக கோப்பையை கைப்பற்றும் நோக்கில் அபுதாபியில் கால்பதிக்க காத்திருக்கிறது.

ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச் (c ), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ் (vc ), ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிளிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

ரிசர்வ் வீரர்கள்: டான் கிறிஸ்டியன், நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ்

தென்னாப்பிரிக்கா: டெம்பா பவுமா (c ), கேசவ் மஹராஜ், குயின்டன் டி காக் (wc), பிஜோர்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, டுவைன் பிரிட்டோரியஸ், காகிசோ ரபாடா,  டாப்ராஸ் ஷம்சி, ராசி வான் டெர் டசன்.

ரிசர்வ் வீரர்கள்: ஜார்ஜ் லிண்டே, ஆண்டிலே பெஹ்லுக்வயோ, லிசாத் வில்லியம்ஸ்

அதேபோல இரவு 7:30 மணிக்கு துபாயில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியும் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Categories

Tech |